உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூடுதல் ஆதார் மையம்அமைக்க வேண்டுகோள்

கூடுதல் ஆதார் மையம்அமைக்க வேண்டுகோள்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சி வளாகத்தின் ஒரு பகுதியில், 'ஆதார்' சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் பதிவு, நிலை சரிபார்ப்பு, பெயர், விலாசம் மாற்றம், பதிவிறக்கம், புதுப்பித்தல், தொலைபேசி எண் பதிவு, மாற்றம் போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்கு வருபவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. குழந்தையுடன் வருவோர் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஒரே ஒரு சேவை மையம் மட்டுமே உள்ளதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, கூடுதலாக, 'ஆதார்' சேவை மையம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை