உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வள்ளிபுரம் பைபாஸில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

வள்ளிபுரம் பைபாஸில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

நாமக்கல், நாமக்கல் நகரில் செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்ட், தற்போது முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டு வருகிறது. நகரில் உள்ள பஸ் ஸ்டாண்ட், டவுன் பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டு வருகிறது. அதில், முதலைப்பட்டியில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ப.வேலுார், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மப்சல் பஸ்கள் நல்லிபாளையம், கருப்பட்டிபாளையம் அகிய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை வழியாக வள்ளிபுரம் பைபாஸ் மேம்பாலம் வழியாக வந்து அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு செல்லும்.இந்நிலையில், வள்ளிபுரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் நிற்கும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லாததால், வெயில், மழையில் நனைந்தபடி தவிப்புக்குள்ளாகின்றனர். அதேபோல், பைபாஸ் மேம்பாலத்தின் மறுபுறம் புது பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பயணிகளுக்கும் நிழற்கூட வசதி இல்லை. இதனால் பயணிகளின் நலன் கருதி, இரண்டு பக்கங்களிலும் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி