உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டயர் ரீட்ரெட்டிங் தொழிலுக்கு மின் கட்டணசலுகை வழங்கணும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

டயர் ரீட்ரெட்டிங் தொழிலுக்கு மின் கட்டணசலுகை வழங்கணும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

நாமக்கல், டிச. 19-'டயர் ரீட்ரெட்டிங் தொழிலுக்கு தமிழக அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்' என, சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தாலுகா டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் லோகசந்திரன், தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜ்குமார், கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலையில் வாகன உரிமையாளர்கள் டயர் ரீட்ரெட்டிங் செய்வது குறைந்து வருகிறது. அதனால், ரீட்ரெட்டிங் தொழில் நலிவடைந்து வருகிறது. டயர் ரீட்ரெட்டிங் தொழிலுக்கு தமிழக அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.டயர் ரீட்ரெட்டிங் தொழிலை விரிவுபடுத்தும் வகையில், மத்திய அரசின் மானிய கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. துணை செயலாளர்கள் வெங்கடேஷ், ஹரி, பொருளாளர் மல்லீஸ்வரன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை