மான் கறி சமைத்த 3 பேருக்கு காப்பு
மான் கறி சமைத்த3 பேருக்கு 'காப்பு'ராசிபுரம், செப். 29-ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டி பகுதியில், மான் கறி சமைத்து சாப்பிடுவதாக ராசிபுரம் வனத்துறைக்கு, நேற்று முன்தினம் புகார் வந்தது. அதன்படி, வனச்சரகர் சத்யா தலைமையிலான வனத்துறையினர், அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதில், போதமலையில் இருந்து குட்டலாடம்பட்டி கிராமத்திற்கு வழி தவறிவந்த மான், விவசாய கிணற்றில் விழுந்து இறந்துள்ளது. இதை பார்த்த போதமலை கீழூரை சேர்ந்த அண்ணாமலை மகன் சேகர், 43, குழந்தைசாமி மகன் ராஜ்குமார், 22, அரப்புளி மகன் சதீஷ், 40 ஆகியோர் கிணற்றில் விழுந்து இறந்த மானை எடுத்து தோலை நீக்கி கறியாக பிரித்துள்ளனர். பின், அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு மீதி கறியை வீட்டிற்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து வனத்துறையினர், 3 பேரையும் கைது செய்தனர்.