முதல்வரை வரவேற்க 3,000 பேர் ராசிபுரம் செயற்குழுவில் தீர்மானம்
ராசிபுரம்: ராசிபுரம் நகர தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்-டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., கலந்து-கொண்டு பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் கருணாநிதி சிலை திறப்பு, நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். முதல்வரை வரவேற்கும் விதமாக, ராசிபுரம் நகர தி.மு.க., சார்பில் ஆண்டகலுார்கேட் பகுதியில் சிறப்பான வர-வேற்பளிக்க வேண்டும்.பொதுமக்களிடம் அரசு நலத்திட்டங்களை கூறி அவர்களையும் அழைத்து வர வேண்டும் என கூறினார். கூட்டத்தில், முதல்வரை வரவேற்க ராசிபுரத்தில் இருந்து, 3,000 கட்சி நிர்வாகிகள் கலந்து-கொள்ள வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டது.மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், நகர மன்ற தலைவர் கவிதா-சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்தியசீலன், மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் பாபு உள்-பட பலர் கலந்து கொண்டனர்.