உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பூங்கொடி, 40; இவர், நேற்று மாலை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த, 'மணி பர்சை' தவறவிட்டார். அந்த வழியாக சென்ற, ஈ-காட்டூர் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் வெள்ளிங்கிரி, பொன்னுசாமி ஆகிய இருவரும், கீழே கிடந்த, 'மணி பர்சை' எடுத்துள்ளனர். அதை திறந்து பார்த்தபோது, ஒன்றரை பவுன் நகை, 5,000 ரூபாய், ஆதார், ரேஷன் கார்டு இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து, ஆவத்திபாளையம் பகுதிக்குட்பட்ட களியனுார் பஞ்., முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், மணி பர்சை தவறவிட்ட பூங்கொடியை வரவழைத்து, நகை, பணத்தை ஒப்படைத்தார். கீழே கிடந்த நகை, பணத்தை ஒப்படைத்த கட்டட தொழிலாளர்கள் வெள்ளிங்கிரி, பொன்னுசாமிக்கு, பூங்கொடி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை