மேலும் செய்திகள்
வெள்ளம் வடிந்ததால் வீடுகளுக்கு திரும்பிய மக்கள்
03-Jul-2025
மேட்டூர் அணை உபரி நீர் சீராக திறக்க உத்தரவு
28-Jul-2025
குமாரபாளையம், மேட்டூர் அணை, 16 கண் மதகு வழியாக அதிகளவில் உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால், காவிரி கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவாய் துறையினர் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். குமாரபாளையத்தில், கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு, கலைமகள் நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலை பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு, 200க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு காலை, மாலை, இரவு என, மூன்று வேளையும் அரசு சார்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், 50,000 கன அடியாக குறைந்ததால், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை, வீட்டிற்கு அனுப்புவதா? அல்லது ஓரிரு நாட்கள் முகாம்களில் தங்க வைப்பதா என, தெரியாமல் வருவாய்த்துறையினர் தவித்து வருகின்றனர்.
03-Jul-2025
28-Jul-2025