உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தகன மேடைக்கு சாலை அமைப்பு

தகன மேடைக்கு சாலை அமைப்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, மொளசி அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்படுகிறது. இந்த எரிவாயு தகன மேடைக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணி, கடந்த, 9ல் நடந்தது. அப்போது சிலர், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ