உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் பி.ஜி.பி., இன்ஜி., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் பி.ஜி.பி., இன்ஜி., கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல், நாமக்கல் பி.ஜி.பி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், 'சாலை பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அசோக் லேலண்ட் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின், மூத்த பயிற்சியாளர் சித்தேஸ்வரன் கலந்துகொண்டார். கல்லுாரி முதல்வர் கவிதா, முகாமை தொடங்கி வைத்தார். பி.ஜி.பி., கல்வி குழுமத்தின் முதன்மையர் பெரிய சாமி பாராட்டி பேசினார். தாளாளர் கணபதி சிறப்புரையாற்றினார்.முகாமில், மாணவர்கள் சாலையில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், மீறினால் ஏற்படும் விபத்து குறித்து காணொலி காட்சி மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ''வாகன ஓட்டிகள் மட்டும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றில்லை; சாலையை பயன்படுத்தும் ஒவ்வொரு தனி நபரும், சாலை விதிகளை பின்பற்றி பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்,'' என, அசோக் லேலண்ட் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின் மூத்த பயிற்சியாளர் சித்தேஸ்வரன் பேசினார். மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை உதவி பேராசிரியர் ராஜ்குமார் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ