உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலை பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ராமு(பொ) தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சாந்தி பங்கேற்றார். அவர் பேசுகையில், ''மாணவர்கள், 18 வயது நிறைவடையாமல் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்கக் கூடாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். பொற்றோர்களை, டூவீலர் ஓட்டும்போது கட்டாயம், 'ஹெல்மட்' அணிய வலியுறுத்த வேண்டும் கார்களில் செல்லும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய அறிவுறுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து சாலை போக்குவரத்து உறுதிமொழி ஏற்ற மாணவர்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். சேலத்தை சேர்ந்த கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் மோகன்ராஜ், ஆர்.ஐ., அசோகன், ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன், உதவி தலைமையாசிரியர் உமா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி