மேலும் செய்திகள்
சாலைப்பணியாளர்கள் மவுன புரட்சி போராட்டம்
14-Oct-2025
நாமக்கல்: ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக நெடுஞ்சா-லைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர், கையில் தராசு ஏந்தியும், கும்மியடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல்-மோகனுார் சாலையில் செயல்படும் கோட்ட பொறி-யாளர் அலுவலகம் முன், தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் வேலு தலைமை வகித்தார். மாவட்ட செய-லாளர் ரவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் பேசினார்.இதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நிய-மனம் கோரியுள்ள சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைக்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத சாலை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் என்பன உள்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியு-றுத்தி, கையில் தராசு ஏந்தியும், கும்மியடித்தும் கோஷம் எழுப்-பினர்.
14-Oct-2025