போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ப.வேலுார்:ப.வேலுாரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் புஷ்பராஜ், 30; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகள் கிருபா, 25; இருவரும், கடந்த, மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டார் பெற்றோரும், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்நிலையில், கிருபாவிற்கு மாப்பிள்ளை பார்க்க அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதனால் புஷ்பராஜ், கிருபா ஆகிய இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் படமுடிபாளையம் முருகன் சன்னதியில், நேற்று காலை திருமணம் செய்துகொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு, ப.வேலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.இருதரப்பினரையும் சமாதானம் செய்துவைத்து, மாப்பிள்ளை வீட்டாருடன் புதுமண தம்பதியரை அனுப்பி வைத்தனர்.