உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப் கார் வசதி தேவை

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப் கார் வசதி தேவை

சேந்தமங்கலம், கொல்லிமலையில் உள்ள, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப் கார் வசதி செய்து கொடுக்க வேண்டும்.சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி நீர்வீழ்ச்சி, நம் அருவி, சீக்குப்பாறறை காட்சி முனையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில்கள் உள்ளதால், இவைகளை பார்ப்பதற்கும் சுவாமி தரிசனம் செய்வதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, 300 அடி உயரத்திலிருந்து செங்குத்தாக ஆகாயத்திலிருந்து தண்ணீர் கொட்டுவது போல் அமைந்து உள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் நீர்வீழ்ச்சி செல்வதற்கு, 1,296 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். வயதானவர்கள், சிறுகுழந்தைகள் மற்றும் பெண்கள் செல்வதற்கு கடினமான சூழல் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் நலன் கருதி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி