ரூ.5 லட்சம் நிவாரண நிதி; கிரீன் பார்க் பள்ளி வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி, பல ஆண்டுகளாக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 'நீட்' பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.சிறந்த முறையில், உலக தரத்தில் வகுப்புகள் எடுப்பதால் மாணவ, மாணவியர் பலர் மருத்துவர்களாகி உள்ளனர். இப்பள்ளியின் நிறுவனர், புயல் பாதிப்பு ஏற்பட்டு பேரிழப்பு ஏற்படும்போதெல்லாம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அரசுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்.அதன்படி, இந்தாண்டு, 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம், கிரீன் பார்க் பள்ளி மற்றும் நீட் பயிற்சி மைய நிறுவனர் சரவணன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.