மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட மாநாடு
09-Feb-2025
நாமக்கல்: 'எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியங்களை பிரித்து, வையப்பமலை ஒன்றியத்தை புதிதாக உருவாக்க வேண்டும்' என, மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின், மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். இணை செய-லாளர் பிரபுசங்கர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலவிநா-யகம், பொருளாளர் லோகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் திருவரங்கன், மாநில செய-லாளர் வீரகடம்பகோபு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர், கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதி-வறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஒட்டுனர் பணியிடங்களை உடனடி-யாக நிரப்ப வேண்டும். கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டங்களுக்கு, தனி ஊழியர் கட்டமைப்பை வழங்க வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், சத்துணவு திட்டத்தில், 60 சதவீதம் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையலர் உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவியாளர் மற்றும் இள-நிலை உதவியாளர் பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் நிலையிலிருந்து உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். பஞ்., செயலர்க-ளுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுப்பு சலுகைகள் வழங்க வேண்டும். எலச்-சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியங்களை பிரித்து, வையப்பமலை ஒன்றியத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்-பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
09-Feb-2025