மேலும் செய்திகள்
பணியாளர் பற்றாக்குறை தள்ளாடும் ஊராட்சிகள்
14-Dec-2024
ப.வேலுார், ஜன. 4--ப.வேலுார் அருகே, கபிலர் மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கபிலர்மலை உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் மின்வாரிய பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதற்கான பயிற்சி விழிப்புணர்வு முகாம், கபிலர்மலை உதவி செயற்பொறியாளர் ராஜா தலைமையில் நடந்தது.இந்த பயிற்சி விழிப்புணர்வு முகாமில், பணியாளர்களின் உயிர் இழப்புகளை தவிர்ப்பது; பொது மக்களுக்கு விபத்து ஏற்படாமல் மின்பாதையை கவனித்துக்கொள்வது; பணியாளர்கள் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்; மழை காலங்களில் பணிபுரிவது குறித்தும் முகாமில் பயிற்சியளித்தனர். மேலும், மின் விபத்து ஏற்பட்டால் அதை கையாள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். கலந்துகொண்ட மின்வாரிய பணியாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு உதவி செயற் பொறியாளர் ராஜா விளக்கமளித்தார் இந்த பயிற்சி விழிப்புணர்வு முகாமில், உதவி பொறியாளர் மாலதி, மணிகண்டன், செந்தில்குமார் உள்பட, 75க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
14-Dec-2024