உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துப்புரவு மேற்பார்வையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

துப்புரவு மேற்பார்வையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

ப.வேலுார்: ப.வேலுார், தனியார் ஓட்டலில் தமிழ்நாடு பேரூராட்சி துப்பு-ரவு மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாநில துணை செய-லாளர் முத்தழகு தலைமை வகித்தார். துணை தலைவர் பாபு சங்கர் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜனார்த்தனன் தீர்மானங்களை நிறைவேற்றினார்.கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. தகுதி வாய்ந்த விருப்ப-முள்ள துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு, உதவி துப்புரவு ஆய்-வாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வை-யாளர்கள், ஒரு வருட துப்புரவு ஆய்வாளர் பணிக்கான பயிற்-சியில் கலந்துகொள்ளும்போது ஊதியம் இல்லா விடுப்பில் கலந்து கொள்ளும் விதிமுறை உள்ளது. இதனை மாற்றி பயிற்-சியில் கலந்து கொள்ளும்போது மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை