உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

துாய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், டிச. 20-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சியில் பணியிபுரியும், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாநகராட்சியில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பி.எஃப்., நிர்ணயிக்கப்பட்ட முழுமையான ஊதியம், இ.எஸ்.ஐ., வழங்காமல் ஒப்பந்த நிறுவனம் காலதாமதம் செய்து வந்துள்ளது.இந்நிலையில் நேற்று பணிக்கு வந்த ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி தலைமையில், ஒப்பந்த நிறுவனம் மற்றும் துாய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இ.எஸ்.ஐ., அட்டை, 10 நாட்களுக்குள் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை