உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வழி தவறி ஊருக்குள் புகுந்த காட்டெருமையால் அச்சம்

வழி தவறி ஊருக்குள் புகுந்த காட்டெருமையால் அச்சம்

எருமப்பட்டி, நவ. 12-கொல்லிமலை அடிவாரத்தில், எருமப்பட்டி உள்ளது. இங்குள்ள கிராம பகுதிகளான முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி பகுதியில், நேற்று காலை காட்டெருமை ஒன்று வழிதவறி வந்து, அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, வீட்டுக்குள் முடங்கினர். தொடர்ந்து, எருமப்பட்டி நகருக்குள் வந்த காட்டெருமையை, அங்கிருந்தவர்கள் மலைப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். ஆனால், பொது மக்களையும், கால்நடைகளையும் காட்டெருமை முட்ட பாய்ந்தது.இந்நிலையில், மதியம், 2:00 மணியளவில், பொன்னேரி அருகே சுற்றித்திரிந்த காட்டெருமையை, அப்பகுதி இளைஞர்கள் விரட்டி, 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த சோளக்காட்டில் சிறை வைத்தனர். சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்ததால், காட்டெருமையால் வெளியில் வர முடியவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், கம்பி வேலியில் இருந்த காட்டெருமையை விடுவித்தனர். வெளியில் வந்த காட்டெருமை, மீண்டும் ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.இதுகுறித்து, வன அலுவலர் கலாநிதி கூறுகையில், ''துறையூர் அருகே, குழிவலம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்துள்ளது. மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காட்டெருமை தானாகவே காட்டுப்பகுதிக்குள் சென்று விடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி