உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்களுக்கு ஆசிரியர் தொல்லை நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை

மாணவர்களுக்கு ஆசிரியர் தொல்லை நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த, விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்-பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக, கடந்த ஆக., 18ல் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, மாணவர்கள், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசா-ரணை நடத்தி, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால், ஆசிரியர் மீது எந்த நடவ-டிக்கையும் எடுக்கவில்லை. அவர், மீண்டும் அந்த பள்ளியிலேயே பணிபுரிந்து வருகிறார். இதையறிந்த பெற்றோர், மாணவர்கள், நாம் தமிழர் கட்சியினருடன் இணைந்து, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பன், பேச்சுவார்த்தை நடத்-தினார். அப்போது, பாலியல் சீண்டலுக்குள்ளான மாணவர்கள், ஆசிரியர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தங்களை ஒரு சமுதாயத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர் மிரட்டுவதா-கவும் புகார் மனு கொடுத்தனர்.அதன்படி, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ