உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குட்கா விற்பனை செய்த 4 கடைக்கு சீல் வைப்பு

குட்கா விற்பனை செய்த 4 கடைக்கு சீல் வைப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பா-லான மளிகை கடை, பெட்டி, டீ கடைகளில் தடை செய்யப்-பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று காலை, பள்ளிப்பா-ளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் மற்றும் பள்-ளிப்பாளையம் போலீசார் அப்பகுதி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, குட்டைமுக்கு பகுதியில் இரண்டு கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட, இரண்டு கடைகள் மீது பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்ப-திவு செய்தனர். தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறையினர், இரண்டு கடைகளையும் பூட்டி, 'சீல்' வைத்தனர். மேலும், ஒரு கடைக்கு, 50,000 ரூபாய், மற்றொரு கடைக்கு, 25,000 ரூபாய் அப-ராதம் விதித்தனர்.* இதேபோல், குமாரபாளையம் பகுதியில் போலீசார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கநாதன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அம்மன் நகர் பகுதியில் உள்ள பழ-னிச்சாமி, 55, மளிகை கடையிலும், காளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீதர், 35, மளிகை கடையிலும் புகை-யிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு, 'சீல்' வைக்-கப்பட்டதுடன், இரண்டு கடைகளுக்கும், தலா, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி