உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தகுதிச்சான்று இல்லாத 3 ஆம்புலன்ஸ் பறிமுதல்

தகுதிச்சான்று இல்லாத 3 ஆம்புலன்ஸ் பறிமுதல்

தகுதிச்சான்று இல்லாத3 ஆம்புலன்ஸ் பறிமுதல் நாமக்கல், டிச. 12-நாமக்கல்லில் கடந்த வாரம் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில், 'தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படுவது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினர். மேலும், சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் உள்பட, 45 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 4 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் நிர்ணயம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ