உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரி செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கும் மூத்த குடிமக்கள் ப.வேலுார்:-

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரி செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கும் மூத்த குடிமக்கள் ப.வேலுார்:-

ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட சொத்து வரி, 9,652, தொழில் வரி, 773, வீடு மட்டும் வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு, 3,488, வரியில்லா இனம், 143, டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் மற்றும் வெளிப்புறம் உள்ள டவுன் பஞ்.,க்கு சொந்தமான, 100க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து பொதுமக்கள் வரி செலுத்தி வருகின்றனர். வரி செலுத்துவதற்கான கம்ப்யூட்டர் அலுவலகம், டவுன் பஞ்., வளாகத்தில் உள்ளது. பெரும்பாலும் வரிக்குரிய கட்டணம் செலுத்துவதற்கு, மூத்த குடிமக்களே அதிகளவில் வருகின்றனர். அவர்கள், வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. மேலும், வரி செலுத்த காத்திருக்கும்போது அமர இருக்கை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால், வரி செலுத்த வரும் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வரி வசூல் செய்யும் டவுன் பஞ்., ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவதால், மதியம் வரை பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. மேலும், டவுன் பஞ்., ஊழியர்களுக்கு அறிமுகமான நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அலுவலகத்திற்கு உள்ளேயே சென்று, நேரடியாக வரி செலுத்துகின்றனர். ஆனால், வெளியில் வரிசையில் நிற்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ