உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரயில்வே பாலத்தால் கழிவுநீர் தேக்கம்

ரயில்வே பாலத்தால் கழிவுநீர் தேக்கம்

ராசிபுரம், ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில், ரயில்வே மேம்பாலத்தில் இருந்து பார்த்தால் குடியிருப்புகளுக்கு அருகே, 5 ஏக்கர் பரப்பில் பசுமை போர்த்திய புல்வெளிபோல் காட்சியளிக்கிறது. ஆனால், இது கழிவுநீர் என்பது அவ்வழியாக செல்பவர்களுக்கு தெரிவதில்லை. ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள ராசிபுரம் ஏரியில் மழைநீர் நிரம்பினால் தண்ணீர் வெளியேற ராஜவாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.இந்த ராஜ வாய்க்கால், சேலம் சாலையை கடந்து ராசிபுரம், சிவன்கோவில், பெருமாள் கோவில் அருகே சென்று எல்.ஐ.சி., அலுவலகம் மற்றும் குடியிருப்புகளை தாண்டி, ரயில் நிலையம் வழியாக அணைப்பாளையம் ஏரியை சென்றடையும். ராசிபுரம் ஏரி, மழைக்காலங்களில் சில வாரங்களிலேயே நிரம்பிவிடும். இந்த மழைநீர், ராஜ வாய்க்கல் வழியாக அணைப்பாளையம் ஏரிக்குத்தான் செல்லும். ஆனால், தற்போது மழைநீரை விட இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் தான் அதிகளவு வருகிறது.ராசிபுரம் ரயில்வே பாலம் அமைக்கும்போது ராஜ வாய்க்காலை மூடிவிட்டனர். இதனால், பாலத்தின் வலது பக்கம் குட்டைபோல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, ராஜவாய்க்காலை துார்வாரி சாக்கடைநீர் தேங்காமல் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை