மேலும் செய்திகள்
ரூ.20 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
29-May-2025
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., 14வது வார்டு மேற்கு தெரு பகுதி, சீராப்பள்ளி டவுன் பஞ்., எல்லையில் அமைந்துள்ளது. மேற்கு தெருவில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சீராப்பள்ளி டவுன் பஞ்., எல்லை மற்றும் நாமகிரிப்பேட்டை கற்றாழைப்பேட்டை அருகே செல்கிறது. ஆனால், நிலப்பரப்பு அமைப்பை பொறுத்தவரை சீராப்பள்ளி டவுன் பஞ்., வழியாக செல்லத்தான் வடிகால் அமைப்பு உள்ளது. இதனால் கழிவுநீரின் பெரும்பகுதி சீராப்பள்ளி எல்லை பகுதிக்கு சென்றுவிடுகிறது.இதனால், சீராப்பள்ளி எல்லையில் வசிப்பவர்கள் கழிவுநீர் வருவது குறித்து தொடர்ந்து புகாரளித்து வந்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன், சீராப்பள்ளி டவுன் பஞ்., நிர்வாகத்தினர் சீராப்பள்ளிக்கு வரும் சாக்கடை கால்வாயில் மண் கொட்டி அடைத்துவிட்டனர். இதனால், சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்க தொடங்கியது. வெளியேறும் பகுதியில் அடைத்து விட்டதால், தெரு பகுதியில் உள்ள சாக்கடையிலும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., நிர்வாகித்திடம் புகாரளித்தனர். அதன்படி, சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதுகுறித்து, சீராப்பள்ளி டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கேட்டபோது, 'சாக்கடையில் யார் மண் கொட்டினார்கள் என, தெரியவில்லை. அப்பகுதியில் வசிப்பவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்திருக்கலாம்' என்றனர்.
29-May-2025