உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் அரசு கல்லுாரியில் சமூகநீதி விடுதி திறப்பு

ராசிபுரம் அரசு கல்லுாரியில் சமூகநீதி விடுதி திறப்பு

ராசிபுரம், ராசிபுரம், அரசு கல்லுாரியில் துணை முதல்வர் உதயநிதி சமூக நீதி விடுதியை திறந்து வைத்து மாணவியருடன் 'செல்பி' எடுத்துக் கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி நாமக்கல் வந்திருந்தார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு செல்லும் வழியில், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுாரிக்கு சென்ற அவர், சமூக நீதி விடுதியை திறந்து வைத்தார். தொடர்ந்து விடுதியில் தங்கி பயிலும் மாணவியரின் பெயர்களை கேட்டதுடன், விடுதியில் உள்ள தேவைகளின் பயன்பாடுகளை கேட்டறிந்தார், வெளியே வந்தவுடன் மாணவியருடன் சேர்ந்து 'செல்பி' எடுத்து கொண்டார்.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் துர்காமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை