மேலும் செய்திகள்
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
15-Sep-2024
பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்சேந்தமங்கலம், செப். 29-சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத, 2வது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில், நாமக்கல், சேந்தமங்கலம், பொட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
15-Sep-2024