உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்நாமக்கல், செப். 27-நாமக்கல், துறையூர் சாலையில் உள்ள பாவலர் முத்துசாமி மாநகராட்சி திருமண மண்டபத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், துாய்மையே சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. எம்.பி., மாதேஸ்வரன், மேயர் காலாநிதி, துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் துாய்மையே சேவை இயக்கம் சார்பில், செப்., 17 முதல் அக்., 2 வரை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, துாய்மையே சேவை இயக்கத்தின் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவ காப்பீடு அட்டைகளை விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியும்.மேலும் தொழிலாளர் நல வாரியத்தில், உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டு அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று பயன் பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு, 100 சதவீதம் நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. புதியதாக சேர்ந்துள்ள பணியாளர்களுக்கு, தற்போது முகாமில் அரங்குகள் அமைக்கப்பட்டு நலவாரிய அட்டை வழங்க பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாட்கோ மூலம் தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களை, முழுமையாக பயன்படுத்தி கொண்டு பொருளாதாரம் மற்றும் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.* ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். சர்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி., கர்ப்பப்பை புற்று, மார்பக புற்று, தொழுநோயை கண்டறிதல் ஆகிய பரிசோதனை நடந்தது.இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.* பள்ளிப்பாளையத்தில் நடந்த முகாமை, நகராட்சி தலைவர் செல்வராஜ், துணை தலைவர் பாலமுருகன் ஆகி யோர் துவக்கி வைத்தனர். எலந்தகுட்டை வட்டார மருத்துவ அலுவலர் செந்தாமரை தலைமையில், 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்தனர். மேலும் மருத்துவ ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகளை துாய்மை பணியாளர்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை நகராட்சி கமிஷனர் தாமரை, சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ