உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

நாமக்கல்: சஷ்டியையொட்டி, நாமக்கல் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.சித்திரை வளர்பிறை சஷ்டி மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி, நாமக்கல்லில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதில், நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அங்கியால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதே சன்னதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சஷ்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.* சித்திரை சஷ்டியையொட்டி, மோகனுார், காந்தமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக்கவசம் சாற்றப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். * நாமக்கல் அருகே, கூலிப்பட்டியில் உள்ள கந்தமலை பழனியாண்டவர் கோவிலில், பழனியாண்டவருக்கு படி பூஜை செய்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், 24 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை