உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எஸ்.பி.பி., காலனியில் வேகத்தடை அவசியம்

எஸ்.பி.பி., காலனியில் வேகத்தடை அவசியம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில் பள்ளி செயல்படுகிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள், சாலையை கடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். அப்போது, சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல சமயம், சாலையை கடந்து செல்லவே மாணவ, மாணவியர் அச்சமடைகின்றனர். அந்தவுளக்கு வாகனங்கள் அசூர வேகத்தில் செல்கின்றனர். எனவே, மாணவ, மாணவியர் பாதுகாப்பு கருதி, வாகனத்தின் வேகத்தை கட்டுப்பத்தும் வகையில், வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ