உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் மாலை; வரதராஜ பெருமாளுக்கு அணிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் மாலை; வரதராஜ பெருமாளுக்கு அணிவிப்பு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், கருட சேவையையொட்டி ஸ்ரீவில்-லிபுத்துார் ஆண்டாள் அணிந்த மாலை, வரதராஜ பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு கருட சேவை நடந்தது.முன்னதாக, நேற்று காலை லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு, 21 வகை-யான வாசனை திரவியங்கள் கொண்டு அபி-ஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து வந்திருந்த ஆண்டாள் அணிந்த மாலை மற்றும் வஸ்திரம், 4 மாட வீதியில் வலம் வந்தது. அதன்பின் மாலை 5 மணியளவில் திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையில் நடைபெறும் நிகழ்வு போன்று நம் வரத ராஜ பெருமாளுக்கும் ஆண்டாள் நாச்சியார் மாலை அணிவிக்கப்பட்டு கருட சேவை நடந்தது. தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இந்த கருட சேவை தொடங்கியது.கேரளா செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, மோகினி ஆட்டம், ராதா, கிருஷ்ணன் நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனத்துடன் கருட சேவை வீதி உலா கோவிலை வந்தடைந்-தது. கருட பஞ்சமியை யொட்டி பெருமாள் கோவில் உள்பிரகாரத்தில் பல்வேறு வகையான சுவாமிகளை தத்ரூபமாக வடிவமைத்து பக்தர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். சுற்று வட்டார பக்-தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை