உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 46 வகை சேவைகளுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

46 வகை சேவைகளுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுாரில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், நேற்று நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார்.அப்போது, அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உங்கள் மொத்தம், 238 சிறப்பு முகாம்கள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. நகர்ப்புற பகுதிகளில், 13 அரசுத்துறைகளைச் சேர்ந்த, 43 சேவைகளும், ஊரக பகுதிகளில், 15 துறைகளை சார்ந்த, 46 சேவைகளும் வழங்கப்படுகிறது.இம் முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தன்னார்வலர்கள் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்கள், வழங்கப்படும். பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல் கையேடு மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ராசிபுரம் அட்மா குழு தலைவர் ஜெகநாதன், ஆர்.டி.ஓ., சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ