உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வையப்பமலை புதுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

வையப்பமலை புதுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மல்லசமுத்திரம், வையப்பமலை புதுாரில் நேற்று நடந்த, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 956 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை புதுாரில் நடந்த முகாமிற்கு, பி.டி.ஓ., பாலவிநாயகம் தலைமை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், தோட்டக்கலை, வேளாண்துறை, தொழிலாளர் நல வாரியம், உள்ளிட்ட, 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 693 பேர் நலத்திட்ட உதவிகள் பெறவும், 263 பேர் மகளிர் உரிமை தொகை பெறவும் என மொத்தம், 956 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11 பேரின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !