உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருச்செங்கோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருச்செங்கோடு, திருச்செங்கோடு, நெசவாளர் காலனி சமுதாய கூடத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் முன்னிலை வகித்தார். நகராட்சியின் 2, 3, 5 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். முகாமில், வீட்டு வரி பெயர் மாற்ற உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெருவிளக்கு வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல் விண்ணப்பங்களை கொடுத்தனர். வருவாய்த்துறை, காவல்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ