உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருச்செங்கோடு திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.இதில், நகராட்சி வீட்டு வரி பெயர் மாற்றம் கோரிய மனுக்கள், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைய விண்ணப்பித்தவர்கள் மனுக்கள் மீது, உடனடி தீர்வு காணப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, நகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த், திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி, முன்னாள் நகராட்சி சேர்மன் நடேசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மலைவாழ் மக்கள் நலத்துறை சார்பாக, சத்தான காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ