உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குறிஞ்சி கல்வி நிறுவனத்தில் மாநில கைப்பந்து போட்டி

குறிஞ்சி கல்வி நிறுவனத்தில் மாநில கைப்பந்து போட்டி

நாமக்கல்,: நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியில் உள்ள, குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கான, மாநில அளவிலான கைப்பந்து போட்டி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே 14 ,17,19 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் நடந்தது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, 150 பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவியருக்கான, 14 வயது பிரிவில் சென்னை எப்.ஐ. ஐ.டி.ஜி.இ.இ., அணி, 17 வயது பிரிவில் ஓசூர் அத்வைத் அணி, 19 வயது பிரிவில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அணி முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றன. மாணவர்களுக்கான 14 வயது பிரிவில் சென்னை வேலம்மாள் வித்யாலயா அணி, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஈரோடு வேளாளர் வித்யாலயா அணி, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ராணிப்பேட்டை தவ்பெல் அணியும் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். மாணவிகள் பிரிவிற்கு நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மாணவர்கள் பிரிவிற்கு நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ் கண்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக அதிகாரி சூரிய பிரகாஷ் ஆகியோர் பரிசு, கோப்பைகளை வழங்கி பாராட்டினர். பள்ளி இயக்குனர் தேவியண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை