உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இயற்கை விவசாயம் குறித்து மாணவர்கள் கல்வி சுற்றுலா

இயற்கை விவசாயம் குறித்து மாணவர்கள் கல்வி சுற்றுலா

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், தனியார் கல்லுாரியை சேர்ந்த, 100 மாணவர்கள், நேற்று இயற்கை விவசாயம் குறித்த தலைப்பில், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.அதில், வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், மண்ணை வளப்படுத்துவதற்கு பலதானியங்கள் வளர்த்து மடக்கி உழுதல், மண்புழு உரம், உயிர் உரங்கள் பயன்படுத்துதல், பூச்சி விரட்டி, பஞ்சகாவ்யா குறித்து விளக்கமளித்தார்.வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் சத்யா, அழகுதுரை, சங்கர் ஆகியோர் மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு முறைகள் பற்றி விளக்கமளித்ததுடன் நேரடியாக மாணவர்களை அழைத்துச்சென்று காண்பிக்கப்பட்டது.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை