உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ்சிலிருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பஸ்சிலிருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பஸ்சிலிருந்து விழுந்தமாணவன் படுகாயம்எருமப்பட்டி, செப், 20-பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயமடைந்தார்.எருமப்பட்டி அருகே பொன்னேரியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் நரேன்குமார், 16, ரெட்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் நரேன்குமார், பள்ளிக்கு செல்ல பொன்னேரி கைகாட்டியில், 10சி என்ற அரசு பஸ்சில் ஏறியுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்துள்ளனர். அப்போது, நரேன்குமார் கை நழுவி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படியில் இருந்து மாணவன் தவறி விழுந்தது, எருமப்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ