உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பால் குடித்த குழந்தை திடீர் உயிரிழப்பு

பால் குடித்த குழந்தை திடீர் உயிரிழப்பு

பால் குடித்த குழந்தை திடீர் உயிரிழப்பு குமாரபாளையம், அக். 17-குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் பூபதி, 24; டூவீலர் மெக்கானிக். இவரது மனைவி நந்தினி, 20. இவர்களுக்கு மகிழினி என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று காலை,8:30 மணியளவில் பால் கொடுத்து தூங்க வைத்துள்ளனர். 10:00 மணியளவில் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை வரும் வழியில் இறந்து விட்டது என கூறினார். இது குறித்து நந்தினி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை