உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாக்கடை கழிவு நீருடன் கலந்து செல்லும் மழை நீரால் அவதி

சாக்கடை கழிவு நீருடன் கலந்து செல்லும் மழை நீரால் அவதி

சாக்கடை கழிவு நீருடன் கலந்து செல்லும் மழை நீரால் அவதிநாமகிரிப்பேட்டை, அக். 25-ஆயில்பட்டியில், சாக்கடையுடன் கலந்து செல்லும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி நகர் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள அம்பேத்கர் காலனியில் மட்டும், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பிரதான சாலையில் இருந்து, காலனிக்கு வரும் சாலையை ஒட்டியுள்ள சாக்கடையை துார் வாராததால் குப்பை, முள்செடிகள், மண் ஆகியவை அடைத்துள்ளது. கொஞ்சம் மழை பெய்தாலும், சாக்கடை தண்ணீருடன் மழைநீரும் கலந்து அப்பகுதியில் குளம்போல் தேங்கி விடுகிறது. அதுமட்டுமின்றி சாலையில் வழிந்தோடுகிறது. தற்போது தொடர் மழை காரணமாக, தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது. டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிக்கும் முன்பு, சாக்கடையை துார்வாரி மழைநீர், கழிவு நீர் தேங்காமல் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி