விவசாயிகளுக்கு கறவை மாடு இடு பொருட்கள் வழங்கல்
ராசிபுரம்: ராசிபுரம் வட்டாரத்தில், 20 விவசாயிகளுக்கு கறவை மாடு, இடு பொருட்கள் வழங்கப்பட்டன. ராசிபுரம் வட்டாரத்தில், வேளாண்மை துறையில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் மூலம் வடுகம் கிராமத்தை சேர்ந்த, 20 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் கலந்து கொண்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் செய்யும் வகையில், மானியத்தில் கறவை மாடுகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல் உதவி வேளாண்மை அலுவலர் பார்கவி, பிரகாஷ், சரவணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேகரன் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவுதம்குமார், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.