உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில் பயன்பாடின்றி கண்காணிப்பு கேமரா

ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில் பயன்பாடின்றி கண்காணிப்பு கேமரா

பள்ளிப்பாளையம், ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில், பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளன.பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது, இதன் வழியாக ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரி, கார், டூவீலர்கள் செல்கின்றன. பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச்செயல்கள் நடப்பதை தடுக்க உதவியாக இருந்தது.தற்போது கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தடுப்பணை அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால், எந்நேரமும் குடிமகன்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால், விபரீதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரவில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், குற்றவாளிகளுக்கு சாதமாக உள்ளது.எனவே, ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில், பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை சரி செய்து, மீண்டும் இயங்கும்படி பள்ளிப்பாளையம் போலீசாரும், ஓடப்பள்ளி தடுப்பணை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி