உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சர்வே எண் குளறுபடியால் வீசாணம் மக்கள் அவஸ்தை

சர்வே எண் குளறுபடியால் வீசாணம் மக்கள் அவஸ்தை

நாமக்கல், நாமக்கல் அடுத்த வீசாணம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், நேற்று கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:நாமக்கல் அடுத்த வீசாணம் கிராமம், நத்தம் சர்வே எண் தற்போது அனைவரது பட்டாவிலும் பழைய எண்ணும், புதிய எண்ணும் உள்ளது. ஆனால், யூ.டி.ஆருக்கு முன், 197 என்று உள்ளது. அதற்கான ஆவணமான, 'ஏ' ரிஜிஸ்டரில் வீசாணம் கிராமம் நத்தம் சர்வே எண், 197 என்றும், தற்போதைய சர்வே எண்ணில், 297 என்று ஒட்டக்குளம்புதுாரில் உள்ள வெள்ள வாரியை காட்டுகிறது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.மேற்படி சர்வே எண், 297 வெள்ளவாரி என்பதால் எங்களால் நிலத்தை கிரயம் செய்யவோ, அடமானமோ வைக்க முடியவில்லை. மேலும், நிலத்தின் மீது அரசு வங்கியில் கடன் பெற முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு சரியான சர்வே எண்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி