உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமான பாக்கு மரங்கள் கணக்கெடுப்பு

சேதமான பாக்கு மரங்கள் கணக்கெடுப்பு

சேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவாரத்தில், சில நாட்களுக்கு முன் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், காரவள்ளி அருகே உள்ள சாமிகரடு, வெண்டாங்கி, கொசவன்குட்டை, புளியன்காடு, நடுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த, 500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து, சூறாவளிக்கு சாய்ந்த பாக்கு மரங்களை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்துறையினர், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பெரும்பாலான மரங்கள் வயது முதிர்வால் நோய் தாக்கம் ஏற்பட்டு முறிந்து விழுந்தது தெரியவந்தது. ஆய்விற்கு சென்ற அதிகாரிகள், விவசாயிகளிடம் கூறுகையில், 'இழப்பீடு வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக' தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை