உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும். பொங்கல் போனஸ் தொகையை நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும். கிராம உதவியாளர் ஓய்வு பெறும்போது கடைசியாக பெறும் ஊதியத்தில், 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ஜமாபந்தி படியை உயர்த்தி வழங்க வேண்டும். 2023 மார்ச் 8ல், நிறுத்தப்பட்ட கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதேபோல் ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ