ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் தேர்வு
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தேர்தல், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்தது.நாமக்கல் ஒன்றிய செயலாளர் சசிகுமார் தேர்தல் அலுவலராக செயல்பட்டார். ஒன்றிய தலைவராக பெரியசாமி, செயலாளராக சுந்தரம், பொருளாளராக தனசேகரன், கொள்கை விளக்க செயலா-ளராக சாரதி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பிரபாவதி, கலைச்செல்வி, தீபா, மகளிரணி அமைப்பாளர் சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலுக்கு பின், பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் செல்வராசன், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொண்-டனர்.