நாமக்கல் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
நாமக்கல், நாமக்கல், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்., 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் (செப்.,5) மிலாடிநபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். ஒரே மாதிரி புடவையணிந்து வந்த ஆசிரியர்களுக்கு, மாணவியர் மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்.அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.