உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் வீர குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி

ராசிபுரத்தில் வீர குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி

ராசிபுரம், :ராசிபுரம், வி.நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை 1ல் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்து முக்கிய வீதி வழியாக சுவாமி திருத்தேர் பவனி நடக்கும். மேலும், இளைஞர்கள் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனாக வீரக்குமாரர்கள் கத்திப்போடும் நிகழ்ச்சி நடக்கும்.அதன்படி, நேற்று தை முதல் நாளையொட்டி முகூர்த்தக்கால் நடுதல், சக்தி அழைத்தல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வீரக்குமாரர்கள் அழகு சேவையுடன் சக்தி அழைத்து முக்கிய வீதி வழியாக தங்கள் உடல்களில் கத்தி போட்டு இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக சாலையில் வாழைக்காயுடன் படுத்தபடி இருந்தனர். அருள் வந்த வீரக்குமாரர்கள் நடனமாடி அவர்கள் மேல் இருந்த வாழைக்காயை வெட்டினர். பின், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி