வருண பகவான் கருணையால் பட்டாசு வியாபாரிகள் மகிழ்ச்சி
பள்ளிப்பாளையம், நவ. 2-பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட், பாலம் சாலை உள்ளிட்ட இடங்களில், 30க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மழை இல்லாததால், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை அமோகமாக நடந்தது.இதுகுறித்து, பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளிக்கு சில நாட்கள் முன், தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பட்டாசு விற்பனை பாதிக்கும் என, கவலையில் இருந்தோம். தீபாவளிக்கு முதல் நாள் இரவு தான், மக்கள் பட்டாசு வாங்க ஆரம்பித்தனர். தீபாவளி நாளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. விதவிதமான பட்டாசுகள், புதிய வரவு பட்டாசுகள், நடுத்தரம், குறைந்த விலை, இரவு நேரம் வெடிக்கும் பட்டாசுகள் என, அனைத்து தர பட்டாசுகளும் விற்று தீர்ந்தன. இந்தாண்டு, 90 சதவீதம் பட்டாசு விற்பனையானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.