உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவல் துறை செயலால் அரசுக்கு அவப்பெயர்

காவல் துறை செயலால் அரசுக்கு அவப்பெயர்

நாமக்கல்: “காவல் துறையின் அத்துமீறிய செயல்களை மட்டுப்படுத்தாவிடில், ஆட்சிக்கு அவப்பெயர் வந்துவிடும்,” என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறினார்.விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தான் எழுதிய 'கடைசி தறியில் கண்டாங்கி சேலை' நுால் வெளியீட்டு விழாவை, நாமக்கல்லில் நேற்று நடத்தினார். இதில், பங்கேற்றவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்புவனம் அஜித்குமார் மரணம் அதிகார அத்துமீறல், கண்டனத்துக்குரியது. அரசு அலுவலர்கள், குறிப்பாக காவல் துறையினர், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நாட்டு மக்களின் உரிமை, நலனை பாதுகாப்பதற்கு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.காவல் துறையினரின் அத்துமீறும் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், ஆட்சிக்கு பெரிய அவப்பெயர் வந்துவிடும். இதை, தமிழக முதல்வர் புரிந்து, தனிக்கவனம் செலுத்த வேண்டும்.கலெக்டர்கள் தன்முனைப்பாக, சுதந்திரமாக செயல்பட சகல அதிகாரமும் உள்ளது. கலெக்டர்கள் தங்களின் அதிகாரத்தை, மக்களுடைய நலனுக்காகவும், மக்களின் உரிமையை பாதுகாக்கவும் செலவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி